சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு!

சென்னையில் மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த அருண்குமார் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிந்தார். இந்த வழக்கில், உயிரிழந்த அருண்குமார் உள்ளிட்டோரை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தண்டபாணியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பணியமர்த்துவதை தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல், எஸ்.சி.எஸ்.டி சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP