பணிச்சுமை காரணமா சரக்கு ரயிலின் ஓட்டுநர் செய்த காரியத்தை பாருங்க!

திருச்சி அருகே பணிச்சுமையின் காரணமாக சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஓட்டுநர் சென்றவிட்டதால், 16 மணி நேரமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.
 | 

பணிச்சுமை காரணமா சரக்கு ரயிலின் ஓட்டுநர் செய்த காரியத்தை பாருங்க!

திருச்சி அருகே, பணிச்சுமையின் காரணமாக சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஓட்டுநர் சென்றவிட்டதால், 16 மணி நேரமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும்  பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வரும் சரக்கு ரயிலை  பூங்கொடி ரயில் நிலையம்  அருகே ஓட்டுநர் நிறுத்தி சென்றுவிட்டார். இதன் காரணமாக சுமார் 16 மணி நேரமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

மேலும், இந்த ரயில்வே கேட் திறக்கப்படாததால் மணிகண்டம், மேல பாகனூர் மற்றும் திண்டுக்கல், மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு இவ்வழியே செல்லும் வாகனங்களும் சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.

இந்நிலையில், சரக்கு ரயில் ஓட்டுநருக்கு உரிய ஓய்வு வழங்கப்படாமல், தொடர்ந்து ரயிலை இயக்க நிர்வாகம் வலியுறுத்தியதால், பணிச்சுமையின் காரணமாக அவர் ரெயிலை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP