லாட்ஜில் தீ விபத்து: இளைஞர் உயிரிழப்பு! தற்கொலையா? என போலீசார் விசாரணை!

கும்பகோணத்தில் லாட்ஜில் நிகழ்ந்த தீ விபத்தில் அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
 | 

லாட்ஜில் தீ விபத்து: இளைஞர் உயிரிழப்பு! தற்கொலையா? என போலீசார் விசாரணை!

கும்பகோணத்தில் லாட்ஜில் நிகழ்ந்த தீ விபத்தில் அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் அறை ஒன்றில் கரும் புகை வெளியானதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் விரைந்து சென்று லாட்ஜின் 3 வது தளத்தில் உள்ள அறையின் கதவை உடைத்து அறை முழுவதும் பரவிய தீயை அணைத்தனர். அப்போது தான் உடல் கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது.

அவரது விபரம் குறித்து விசாரித்த போது, உடல் கருகி உயிரிழந்த நபர் நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ராம்குமார் என்பது தெரிய வந்தது.

மேலும் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட போது அறை முழுவதும் தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm,in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP