9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்-நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்
 | 

9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்-நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி தெரிவித்தார். டிசம்பவர் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் பழனிசாமி கூறினார். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை  காலை 10 மணிக்குத் தொடங்கும் என்றார். 
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு வெவ்வேறு நிறங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறினார். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவா்கள் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்    டிசம்பர் 9
மனு தாக்கலுக்கு கடைசி நாள்    டிசம்பர் 16
வேட்புமனுக்கள் மீது ஆய்வு    டிசம்பர் 17
மனுக்களைத் திரும்பப் பெறுவது    டிசம்பர் 19
முதல்கட்ட வாக்குப் பதிவு    டிசம்பர் 27
இரண்டாம் கட்டம்    டிசம்பர் 30
வாக்கு எண்ணிக்கை    ஜனவரி 2
தேர்வான உறுப்பினர் பதவியேற்பு    ஜனவரி 6
மறைமுகத் தேர்தலுக்கான கூட்டம்    ஜனவரி 11
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP