விவசாய மக்களின் நலன் காக்கும் அரசாக திகழ்வோம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நீர் மேலாண்மை திட்டத்தை முதன்மைபடுத்தி செயல்படுத்தி வரும் இந்த அரசு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விவசாய மக்களின் நலன் காக்கும் அரசாக திகழ்வோம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 | 

விவசாய மக்களின் நலன் காக்கும் அரசாக திகழ்வோம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நீர் மேலாண்மை திட்டத்தை முதன்மைபடுத்தி செயல்படுத்தி வரும் இந்த அரசு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விவசாய மக்களின் நலன் காக்கும் அரசாக திகழ்வோம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் 592 பயனாளிகளுக்கு 5 கோடியே 4 லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

இதை தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,: மக்களின் பிரச்சினைகளை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்பதற்காவே இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பயனளிக்காத ஆட்சி என்று ஸ்டாலினும், எதிர்க்கட்சிகளும் குறை கூறி வருகிறது. அவர்களுக்கு நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டத்தின் மூலம் பதிலளிக்கிறேன் என்று பட்டியலிட்டு பேசினார்.

மேலும் குடிமாரமுத்து திட்டம் சிறப்பான திட்டம். இதன் மூலம் பல்வேறு ஏரிகள் தூர் வாரப்பட்டு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அறிவித்த பிறகு தான் ஸ்டாலின் ஏரிகளை பார்வையிட்டு வருகிறார். ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் போது ஒரு ஏரியையாவது பார்வையிட்டரா? என்று  கேள்வி எழுப்பினர்.

மேலும் காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் வறட்சி பகுதிகள் முழுவதும் பாசன வசதியாக மாறும் கரூர் முதல் குண்டாறு வரை கால்வாய் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின்  எண்ணத்தை நிறைவேற்றுவோம் என்றார்.

இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்கள் வழியாக வைகை நதிக்கும் பின்னர்  குண்டாறுக்கும்  கால்வாய் வெட்டப்படும் என்று தெரிவித்தார். டெல்டா பாசன விவசாயிகளுக்கு நவீன கால்வாய்கள் வசதி செய்து தர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது  விரைவில் உலக வங்கி உதவியுடன் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்

இதைத் தொடர்ந்து பேசிய அவர், மேட்டூர் அணையை தூர்வாரி  சரித்திர சாதனை படைத்த அரசு அதிமுக அரசு. எந்த அரசும் செய்யாததை 83 ஆண்டுகளுக்கு பிறகு செய்துள்ளது என்றும் பேசினார்.  நீர் மேலாண்மை திட்டத்தை முதன்மைபடுத்தி செயல்படுத்தி வரும் இந்த அரசு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விவசாய மக்களின் நலன் காக்கும் அரசாக திகழ்வோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP