லலிதா ஜூவல்லரி கொள்ளை: தேடப்பட்டுவந்த குற்றவாளி சரண்!

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
 | 

லலிதா ஜூவல்லரி கொள்ளை: தேடப்பட்டுவந்த குற்றவாளி சரண்!

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். 

திருச்சியில் உள்ள லலிதா ஜூல்லரியில் கடந்த அக்2 ஆம் தேதி பின்பக்க சுவரில் ஓட்டை போட்டு ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் சிக்கினார். சுரேஷ் என்பவர் தப்பியோடிய நிலையில், காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் இன்று சுரேஷ் சரணடைந்தார். இந்த கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகன் தலைமறைவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP