கோவை: ரூ.50 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை பி-3 வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா பொருட்களை மாநகர போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
 | 

கோவை:  ரூ.50 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை பி-3 வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா பொருட்களை மாநகர போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சட்டவிரோதமாக பான் மசாலா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகரில் பான்மசாலா குட்கா விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர போலீசார் தனிப்படை அமைத்தும் அந்தந்த காவல் நிலையங்களின் உதவியுடனும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சரவணம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் பி-3 வெரைட்டி ஹால் காவல் எல்லையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர், பாலாஜி சரவணன் தலைமையிலான தனிப்படையினருடன், வெரைட்டி ஹால் போலீசாரும் தாமஸ் வீதியிலுள்ள குடோனில் சோதனை மேற்கொண்டனர். 

இதில் தடை செய்யப்பட்ட கூல் லிப்ஸ் 100 பாக்கெட்டுகள், பதான் 350 பாக்கெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். அங்கு இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்டதில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (20) என்பதும். இவர் அந்த குடோனின் உரிமையாளர் என்பதும் அதேபோல இவர் பெங்களூருவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் தாமஸ் வீதியை சேர்ந்த யுவ்ராஜ் (20) என்பதும் இவர் தினேஷிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP