Logo

கும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

கும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 6வருடங்கள் ஆகிறது. ஏற்கனவே இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  அவரது மனைவி உமா (35) இரண்டாவது குழந்தைக்காக  நரசிங்கன்பேட்டை  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று கடுமையான பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற உமாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உமாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனிடையே உமா ரத்தப்போக்கால் அவதிப்படுவதாக கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துள்ளனர். ஆனால் உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உமாவிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கனவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்து தவறான சிகிச்சையால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP