கும்பகோணம்: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல்-2 பேர் கைது!

கும்பகோணம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 1200 வெளிமாநில மதுபாட்டில்கள் சிக்கின.
 | 

கும்பகோணம்: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல்-2 பேர் கைது!

கும்பகோணம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 1200 வெளிமாநில மதுபாட்டில்கள் சிக்கின. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செங்கனூர் திருப்பனந்தாள் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 1200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மதுபாட்டில்களை கடத்தி வந்த அரவிந்த், சந்தோஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடி மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP