கும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி

கும்பகோணத்தில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் பூம்புகார் விற்பனை நிலையம் சிறப்பு கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது.
 | 

கும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி

கும்பகோணத்தில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் பூம்புகார் விற்பனை நிலையம் சிறப்பு கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது.

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தொழில் வளர்ச்சி கழகம் சார்பில்  ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளை கைவினைக் கலைகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 

கும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தோடும் பொது மக்களுக்கு நேரிடையாக அவர்கள் விற்பனை செய்யும் வாய்ப்பையும் வழங்கும் வகையில் பூம்புகார் நிறுவனம் இக்கண்காட்சியை தொடங்கி உள்ளது.

கும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி

136 நாட்கள் நடைபெறயுள்ள இக்கண்காட்சியினை வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கலைப்பொருட்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பஞ்சலோக சிலைகள், கற் சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், தஞ்சாவூர் கலைஓவியங்கள் , குத்துவிளக்குகள் , பவளம் முத்து, மற்றும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகைகள் பட்டுப் புடவைகள், பேன்சி சேலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வாசனை ஊதுவர்திகள், வாழைநார் கைவினைப் பொருட்கள், சங்குகள், பூஜை பொருள்கள் மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. ரூ50 முதல் 4.25 லட்சம் வரையிலான கைவினை பொருட்கள் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP