கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்கனா பேச்சுப் போட்டி நடைபெற்றது  

கும்பகோணத்தில் கார்த்திக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வாங்க தமிழ் பேசலாம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 | 

கும்பகோணத்தில் தனியார் பள்ளியும், இந்திய தன்னார்வ சங்கங்கள் இணைந்து  கல்வி மாவட்ட அளவில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான  மாணவ மாணவியர்க்களுக்கு ''வாங்க தமிழில் பேசலாம்'' என்ற தலைப்பில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. உலகின் மூத்தமொழி தமிழ் மொழி, தாய்க்கு நிகரான மொழி, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினமும், தமிழ் மொழியும் இத்தகைய பல்வேறு பெருமைகளை உடையது தமிழ் மொழி.

 இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியில் பேச்சு போட்டிகள் நடத்தபடுவதன் மூலம் மாணவ மாணவியர்கள் தமிழை பற்றியும் தமிழ்  மொழியின் பெருமை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். இப்போட்டியில் கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு பள்ளிகளில் உள்ள 500 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்கனா பேச்சுப் போட்டி நடைபெற்றது   

இப்போட்டியினை கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கார்த்திகேயன்  தொடங்கி வைத்தார். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் தமிழின் பெருமை, தமிழின் தொன்மை, வீர தமிழினம், விஞ்ஞான வளர்ச்சி, விவசாயத்தின் பெருமை, சுதந்திர போராட்ட வீரர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மிகவும் சிறப்பாக பேசினார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகளும் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல் பட்ட மாணவ மாணவியர்களுக்க நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP