கும்பகோணம் : அரசுப் பேருந்துக்கு கீற்றுகள் வேயும் நூதன போரட்டம் 

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் கொட்டியதையடுத்து, அந்த பேருந்துக்கு கீற்றுகள் வேயும் நூதன போரட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
 | 

கும்பகோணத்திலிருந்து இன்னம்பூர் வழியாக திருப்புறம்பியம் வரை செல்லும் 6 ஆம் எண் அரசுப் பேருந்தில் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேதமடைந்த பேருந்தின் மேற் கூரை வழியாக மழை நீர் பேருந்துக்குள் கொட்டி மாணவர்கள், பொதுமக்கள் நனைந்தனர். மேலும் மாணவர்களின் நோடடுப் புத்தகங்களும் நனைந்தன.

இது குறித்து ஏற்கனவே பல முறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இன்று காலை அந்த பேருந்தை சிறை பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்றும் பொதுமக்கள், அந்த பேருந்தின் மேற்கூரைககு கீற்றுகளால் கூறை வேயும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலையில் அமர்ந்தும் முழக்கமிட்டனர். இதையடுத்து சுவாமிமலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இன்னம்பூர் அருகே சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP