கும்பகோணம்: கணித மேதை ராமானுஜன் விருது !

கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வதேச அளவில் கணிதத் துறையில் சிறந்து விளங்கும் இருவருக்கு சாஸ்த்ரா பல்கலைகழகம் இன்று (டிச.21) ராமானுஜன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
 | 

1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ஈரோட்டில் பிறந்தார்  கணித மேதை ராமானுஜன். பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை கும்பகோணத்தில் நிறைவு செய்தார் .  எண் கணிதத்தில் மிகவும் சிறந்து விளங்கினார். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் இவர் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் 131 வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் கணிதத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் 32 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் யுஎஸ் டாலர் மதிப்பிலான ராமானுஜன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

இன்று (டிச.21) அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் யூபிங் லீ க்கும், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியர் ஜேக் துரோன் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டிற்கான ராமானுஜன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கணிதத் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP