கும்பகோணம்: தீ விபத்தில் கர்ப்பமான பசு உடல் கருகி பலி

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் கர்ப்பம் தரித்த பசு உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் உள்ள அம்மன்பேட்டை மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு மழை பெய்ததால் வெளியில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை வயலுக்கு நடுவில் உள்ள பெரிய பம்ப் செட் அறையில் கட்டியுள்ளார். 

கும்பகோணம்: தீ விபத்தில் கர்ப்பமான பசு உடல் கருகி பலி

இந்நிலையில், இன்று காலை வயலுக்கு சென்ற ஜெயப்பாண்டியன் தீ பற்றி எரிந்த பம்பு செட் அறையில் பசு கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மற்றும் விவசாயப் பொருட்கள் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 

இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP