கும்பகோணம் தீ விபத்து: 15ஆம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர்தூவியும், இனிப்புகள் படைத்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 | 

ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இன்று 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பள்ளியின் முன்பு குழந்தைகளின் படங்களை வைத்து மாலை அணிவித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த குழந்தைகளின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

கும்பகோணம் தீ விபத்து: 15ஆம் ஆண்டு நினைவு தினம்

மேலும் குழந்தைகளின் சமாதிகளை மலர்களால் அலங்கரித்து குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வைத்து வணங்கி வருகின்றனர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP