கும்பகோணம்: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!

கும்பகோணத்தில் உலக சதுரங்க தினத்தையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
 | 

கும்பகோணம்: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!

கும்பகோணத்தில் உலக சதுரங்க தினத்தையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சதுரங்கப் போட்டி என்பது ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான போட்டியாகும். இந்த விளையாட்டை விளையாடுவதால், மாணவ- மாணவிகளுக்கு மன ஒருமைப்பாடு, யோசிக்கும் திறன், மாறுபட்டு சிந்தித்து செயல்படும் திறன், ஞாபகத் திறன் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20ம் தேதி உலக சதுரங்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கும்பகோணம் தனியார் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

5 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் கும்பகோணத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP