கும்பகோணம் : ரசாயணத்தைக் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! 

கும்பகோணத்தில் கல்லூரி பேராசிரியர் சாதி ரீதியில் திட்டியதாகக் கூறி முதுகலை பட்டப்படிப்பு மாணவி ஒருவர் ஆய்வக ரசாயணத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ள
 | 

கும்பகோணம் : ரசாயணத்தைக் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! 

கும்பகோணத்தில் கல்லூரி பேராசிரியர் சாதி ரீதியில் திட்டியதாகக் கூறி முதுகலை பட்டப்படிப்பு மாணவி ஒருவர் ஆய்வக ரசாயணத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா என்கிற மாணவி முதுகலை  பட்டப்படிப்பு பயின்று வருகிறார். அந்த மனைவி தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் சமர்ப்பித்ததாகவும், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத பேராசிரியர் ரவிச்சந்திரன் சில காரணங்களுக்காக தட்டிக்கழித்தாகவும் மாணவி தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பேராசிரியர் சாதி ரீதியாக தன்னை திட்டியதாக மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து மனமுடைந்த மாணவி நேற்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த உயிருக்கு ஆபத்தான ரசாயணத்தை அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் மயங்கி விழுந்த மாணவியின் நிலை கண்ட அருகில் இருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மாணவியின் தாய் ஜோதி தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP