கும்பகோணம்: சக்கரபாணி திருக்கோயில் கடைமுழுக்கு விழா!

கும்பகோணம் சக்கரபாணி திருக்கோயில் துலாம்ஆண்டு கடைமுழுக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 | 

கும்பகோணம்: சக்கரபாணி திருக்கோயில் கடைமுழுக்கு விழா!

கும்பகோணம் சக்கரபாணி திருக்கோயில் துலாம்ஆண்டு கடைமுழுக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி 30 ஆம் நாள் துலாம் ஆண்டு கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று சுதர்சன வள்ளி சமேத சக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக வந்து சக்கரைபடித்துறையில் கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்த வாரியில் பால சக்கரபாணிக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: சக்கரபாணி திருக்கோயில் கடைமுழுக்கு விழா!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP