கும்பகோணம்: இந்திய பண்பாட்டு அமைப்பின் விருது வழங்கும் விழா!

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் சமூக பணிகளையும், துறைசார்ந்த பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு இந்திய பண்பாட்டு அமைப்பு சார்பில் ஸ்ரீமந் நடன கோபால சுவாமிகள் முப்பெரும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 | 

கும்பகோணத்தை அடுத்த  திருப்புவனத்தில் நடைபெற்ற ஸ்ரீமந் நடன கோபால சுவாமிகள் முப்பெரும் விழாவில் இந்திய பண்பாட்டு அமைப்பு சார்பில் சமூகப் பணிகளையும் துறைசார்ந்த பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் ஆன்மீகம், தமிழ் வளர்ச்சி, மருத்துவத் துறை, புகைப்படத் துறை, இந்திய கலாச்சார துறை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் திறம்பட பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு விருதுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் சமுதாய தொண்டாற்றும் வகையில் காது கேளாதோர்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேராசிரியர் கண்ணன் எழுதிய ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்,  ஜோதிமலை இறைபணி கூட்டம் தலைவர் தவத்திரு திருவடி குடில் சுவாமிகள், தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பி எஸ் வாசன், மக்கள் நல கவிஞர் வீர ஜெயராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய பண்பாட்டு அமைப்பினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP