அங்கே தான் கொன்று போட்டேன் தேடிக்கோங்க! போலீசாரை அதிர வைத்த சைக்கோ கொலைக்காரன்!

அன்று 60 வயது பாட்டி.. இன்று 6 வயது சிறுவன்.. பாலியல் தொல்லை அளித்து கொலை செய்யும் சைக்கோ
 | 

அங்கே தான் கொன்று போட்டேன் தேடிக்கோங்க! போலீசாரை அதிர வைத்த சைக்கோ கொலைக்காரன்!

தூத்துக்குடி மாவட்டம் முத்தலாபுரம் அருகே 60 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு மன நோயாளி போல நடித்து தப்பிய இளைஞன் ஒருவன், தற்போது 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்தும் மிதித்தும் கொலை செய்ததாக போலீசில் சிக்கி உள்ளான். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு முத்தாலபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். அவரது செயல்கள் மன நோயாளி போல இருப்பதால் அவர் செய்யும் தவறுகளை அப்பகுதியினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை அருள்ராஜ் அழைத்துச்சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அருள்ராஜை பிடித்து போலீசார் விசாரித்த போது அவன் தன்னை பின் தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் காலால் மிதித்ததாகவும், இதில் அவன் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான்.

அங்கே தான் கொன்று போட்டேன் தேடிக்கோங்க! போலீசாரை அதிர வைத்த சைக்கோ கொலைக்காரன்!

போலீசாரிடம் சொன்னதையே திரும்ப சொல்லி பைத்தியகாரன் போல நடித்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுவனின் சடலம் கிடக்கும் இடத்தையும் அவனே தெரிவித்துள்ளான். அங்கு சென்று பார்த்த போது, சிறுவனின் கழுத்தில் கத்தியால் அறுத்த காயங்கள் இருந்ததால் சிறுவன் கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். மருத்துவர்களின் ஆரம்ப கட்ட பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் கொடுத்த சிறப்பு கவனிப்பில் பைத்தியகாரன் போல நடித்த அருள்ராஜின் வேஷம் கலைந்தது. இதனிடையே அருள்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கே தான் கொன்று போட்டேன் தேடிக்கோங்க! போலீசாரை அதிர வைத்த சைக்கோ கொலைக்காரன்!

சிறுவனை கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்ற போது சிறுவன் சத்தமிட்டதால் அவனை மிதித்து கொலை செய்ததாகவும், அவன் உயிர் பிழைத்து காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கழுத்தை அறுத்ததாகவும் அருள்ராஜ் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு 60 வயது மூதாட்டி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவத்தில் அருள் ராஜை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி தன்னை ஒரு மன நோயாளி போல காட்டிக் கொண்டு அருள்ராஜ் எளிதாக தப்பி உள்ளான். தற்போது அருள்ராஜின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதால் அவர் மீதான விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP