திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படவள்ளது.
 | 

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படவள்ளது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜையும், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறவுள்ளன.

இரண்டாம் திருநாள் முதல் ஐந்தாம் திருநாள் வரை கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இம்மாதம் 13ஆம் தேதி சூரசம்ஹார விழாவும், இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

14ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதையொட்டி, நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவையும் நடைபெறவுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP