பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
 | 

பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து  ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட முதலமைச்சர் இன்று முதல் வரும் நவம்பர் 13ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டார். 

அதன்படி, இன்று பாரூர் ஏரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தண்ணீர் திறந்துவிட்டார். பாரூர் பெரிய ஏரி நீரால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள   2397  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP