பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகம்

தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
 | 

பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகம்

சேலத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பெருநிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டிலை போடும் போது அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரித்து வைத்துக்கொள்ளும். 

பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகம்

அதுமட்டுமின்றி காலியான பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக ஐந்து நிமிடம் இலவசமாக கைப்பேசிக்கு சார்ஜ் செய்துக்கொள்ளும் வசதி, ஐந்து நிமிடம் இலவச wifi வசதி, 250 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என ஐந்து வகையான சலுகைகளை பெறும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அறிமுகம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ் , பொதுமக்கள் இந்த இயந்திரத்தை உரியமுறையில் பயன்படுத்தி காலி பாட்டில்களை தூக்கி எறியாமல் இந்த இயந்திரத்தில் போட்டு மேற்படி இலவச வசதிகளை பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP