பணப் பட்டுவாடா புகார் குறித்து, சேலம் ஆட்சியர் ரோஹிணி பேட்டி

பணப்பட்டுவாடா குறித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முறையாக விசாரணை நடத்திய பின்னர், விரிவான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தெரிவித்தார்.
 | 

பணப் பட்டுவாடா புகார் குறித்து, சேலம் ஆட்சியர் ரோஹிணி பேட்டி

சேலம் எடப்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வழங்கப்படுவதாக, சேலம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன்  புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோஹிணி, பணப்பட்டுவாடா குறித்த‌ புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முறையாக விசாரணை நடத்திய பின்னர், விரிவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் சேலம் மாவட்டத்தில் இதுவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும் வாக்காளர்கள் பாதுகாப்பாக தனது ஜனநாயக கடமையை ஆற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP