கொள்ளிடம் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!

திருச்சி முக்கொம்பு அணையின் நீர்வரத்து 72 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
 | 

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!

திருச்சி முக்கொம்பு அணையின் நீர்வரத்து 72 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 

சேலம் மேட்டூர் அணையில் இருந்து திருச்சி முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது திருச்சி முக்கொம்பு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 72 ஆயிரம் கன அடியாக உள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து வினாடிக்கு 39ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு கல்லணைக்கு செல்கிறது. 31,000ஆயிரம் கன அடி நீரானது கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி வாய்க்கால், அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் 1,000 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரின் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP