அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் ரோஹிணி

சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும், ஆசிரியர்கள் வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
 | 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் ரோஹிணி

சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். 

 பெண்கள் முன்னேறும் வகையிலும், சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும், சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தின் சார்பில் தொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, "ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் குறிப்பாக மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களில் குறைவான மாணவர்கள் தான் இருப்பார்கள். அதை வரவேற்க வேண்டும். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அவர்களின் நலனுக்காக அப்பகுதிகளில் அரசுப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP