பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

கோவை - திருச்சி சாலையில் உள்ள பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 | 

பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

கோவை - திருச்சி சாலையில் உள்ள பிரபல போட்டோ ஸ்டூடியோவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஜீரோ கிராவிட்டி என்ற போட்டோ ஸ்டூடியோ நிறுவனமானது திருமணம், கலை நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. இதில் கோவை முக்கிய கிளையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை உள்ள கிளை நிறுவனத்தில்  கணக்கில் இல்லாத பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமானவரித்துறையினர் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட வந்தனர். அப்போது, உரிமையாளர் இல்லாததால் ஊழியர்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர். இதைதொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இன்று காலை 2 வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP