ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி வரும் டிச.18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 18ம் தேதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 7ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, மார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், கல்பதித்த ஒட்டியாணம், முத்துமாலை, தங்க அரைநெல்லி மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்தபடி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP