அமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு! நள்ளிரவில் பரபரப்பு

சென்னையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தங்கியுள்ள விடுதி அறையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
 | 

அமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு! நள்ளிரவில் பரபரப்பு

சென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும்  விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறையில், வருமானவரித் துறையினர் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமர் அறையிலும் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையால் பரபரப்பு நிலவியது. சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவில்லை

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP