என் குழந்தை இல்லாத உலகத்தில் யார் குழந்தையும் இருக்ககூடாது.. பெண்ணின் வெறிச்செயல்

என் குழந்தை இல்லாத உலகத்தில் யார் குழந்தையும் இருக்ககூடாது.. பெண்ணின் வெறிச்செயல்
 | 

என் குழந்தை இல்லாத உலகத்தில் யார் குழந்தையும் இருக்ககூடாது.. பெண்ணின் வெறிச்செயல்

தனது குழந்தை இறந்த விரக்தியில் உறவுக்காரரின் கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து நெல்லை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி பூப்பாண்டியபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர் செல்வராஜ் - நந்தினி தம்பதியர். இவர்களுக்கு 6மாதத்தில் செல்வ கணே‌‌ஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. வேலைக்கு செல்லும் செல்வராஜ் தனது மனைவி குழந்தையை முல்லைநகரில் உள்ள மாமியார் வீட்டில் விட்டுச்செல்வார். வழக்கம்போல் அங்கு விடப்பட்டிருந்தப்போது திடிரென மதியம் நேரத்தில் குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேடியப்போது அங்குள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் கிடந்தது.

என் குழந்தை இல்லாத உலகத்தில் யார் குழந்தையும் இருக்ககூடாது.. பெண்ணின் வெறிச்செயல்

தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, நந்தினியின் தாய் வீட்டில் வசித்துவந்த அவரது உறவுக்கார பெண்ணான பஞ்சவர்ணம் (31) என்பவரே, குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. மேலும் விசாரணையின்போது, பஞ்சவர்ணத்திற்கு பிறந்த குழந்தை 6 மாதத்தில் உயிரிழந்தது. இதனால் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். தனது குழந்தை இறந்ததில் இருந்தே பஞ்சவர்ணம் மன நலம் பாதிக்கப்பட்டு யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த நந்தினியின் குழந்தையை எடுத்து பஞ்சவர்ணம் விளையாடியுள்ளார். பின்பு விட்டின் முன் இருந்த கிணற்றுக்குள் குழந்தையை வீசி கொலை செய்துள்ளார். குழந்தையை ஏன் கிணற்றில் வீசி கொன்றாய் என பஞ்சவர்ணத்திடம் கேட்டதற்கு, எனது குழந்தை இறந்தபிறகு இந்த குழந்தை எதற்கு உயிருடன் இருக்க வேண்டும் உன கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பஞ்சவர்ணத்தை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP