வாகன விபத்தின்போது, தவறி விழுந்த துப்பாக்கியால் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தின் போது இருசக்கர வாகனத்தில் இருந்த துப்பாக்கி தவறி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
 | 

வாகன விபத்தின்போது, தவறி விழுந்த துப்பாக்கியால் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தின் போது இருசக்கர வாகனத்தில் இருந்த துப்பாக்கி தவறி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள சீத்தக்கிழவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் திருச்சி போலீஸ் பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கார்த்திக் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் திருச்சிக்கு திரும்பியுள்ளார்.

திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கல்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தின் அருகே துப்பாக்கி ஒன்று இருப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வாகன விபத்தின்போது, தவறி விழுந்த துப்பாக்கியால் பரபரப்பு!

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த துப்பாக்கி ஏர்கன் என்று தெரியவந்துள்ளது.  

இருப்பினும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டால் துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து விட வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் காவலர் ஒருவர் எப்படி துப்பாக்கியை எடுத்துச் சென்றார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP