குழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன்..!

குழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன்..!
 | 

குழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன்..!

குழந்தை இல்லாததால் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி மனைவியை கணவரே கொலை செய்த சோக சம்பவம்  நிகழ்ந்துள்ளது. 

புதுக்கோட்டை விராலிமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 17ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கண்டெடுக்கப்பட்ட சடலம் பானுரேகா என்ற இளம்பெண் என்பதை கண்டுபிடித்தனர். பானுரேகா உயிரிழப்பு குறித்து அவரது தந்தை விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார், பானுரேகாவின் கணவர் ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன்..!

விசாரணையில் பானுரேகாவை கொலை செய்ததாக ராஜ்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், குழந்தை பிறக்கவில்லை என்று கூறி மனைவியை கொலை செய்தேன். குழந்தை வரம் வேண்டி சமயபுரம் கோவிலுக்குச் செல்லலாம் என மனைவியை பைக்கில் அழைத்துச்சென்றேன். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லலாம் எனக்கூறி, விராலிமலை அருகே பானுரேகாவை கொலை செய்தேன். அங்கேயே உடலுக்கு தீவைத்து விட்டு திரும்பி வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP