திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

திருச்சியில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 | 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கண்டன உரை நிகழ்த்தியதுடன், அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

அவர்களது கோரிக்கைகள் பின்வருமாறு:

►  தமிழக அரசால் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும்.

►  வேலைவாய்ப்பற்ற பார்வையற்றவர்களுக்கு பெட்டிக்கடை உள்ளிட்ட சிறுதொழில் நடத்திட இடம் வழங்கிட தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

►  பார்வையற்றவர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். 

►  வேலைவாய்ப்பற்ற பார்வையற்ற இசைக் கலைஞர்களுக்கும் வயது வரம்பின்றி மாதாந்திர சிறப்பு உதவித் தொகை வழங்கிட வேண்டும். 

►  படித்த கண் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு மத்திய மாநில அரசுகள் விதிமுறைகளை தளர்த்தி வேலைவாய்ப்பு அளித்திடவேண்டும்.

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

►  அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருக்கிற ரயில் பயண பெட்டிகளை மீண்டும் இணைத்திட ரயில்வே துறைக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP