கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு  மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி!

கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு கோவை மண்டலம் கார்ப்பரேஷன் வங்கியின் சார்பாக மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 | 

கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு  மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி!

கண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு கோவை மண்டலம் கார்ப்பரேஷன் வங்கியின் சார்பாக  மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக முழுவதும் கண்காணிப்பு தின வார விழாவை முன்னிட்டு வங்கி ஊழியர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி கார்ப்பரேஷன் வங்கி கோவை மண்டலம் சார்பாக கண்காணிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு வங்கியின் ஊழியர்களும் அலுவலர்களும் இணைந்து மனிதச் சங்கிலி மற்றும் பதாகைகள் ஏந்தியபடி நடைபயணமாக  மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த பேரணியானது சாய்பாபா காலனி வங்கியில் இருந்து  சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலை தூரம் சென்று மீண்டும் வங்கி வரை சென்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் துணை பொது மேலாளர் விட்டல் பனசங்கரி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் .மேலும் உதவி பொது மேலாளர்கள் தட்டி ஸ்ரீனிவாஸ் வாசு, ஹனுமந்த ராவ் ராஜேஷ் கண்ணா, மற்றும் முதன்மை மேலாளர் ஜெயக்குமார், வங்கி ஊழியர்கள் என  பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP