அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..

மலேசியாவில் இருந்து நூதன முறையில் கைக்கடிகாரத்தில் மறைத்து கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..

மலேசியாவில் இருந்து நூதன முறையில் கைக்கடிகாரத்தில் மறைத்து கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அஜ்மல்கான் என்பவரின் பையில் இருந்து ஏராளமான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. அதனை ஆய்வு செய்த போது, தங்கத்தை தகடுகளாக மாற்றி கைக்கடிகாரத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, சுமார் ரூ.23.80 லட்சம் மதிப்புடைய 690 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக அஜ்மல்கானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP