நாட்டின் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது: திருநாவுக்கரசர்

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை கொண்டு வர நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், இது இந்தியாவில் நடக்காது எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 | 

நாட்டின் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது: திருநாவுக்கரசர்

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை கொண்டு வர நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், இது இந்தியாவில் நடக்காது எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் ட்விட்டருக்கு பதிலளித்த அவர், இது மாதிரி யார் கூறியிருந்தாலும் பெருத்த கண்டனத்துக்கு உரியது என கூறினார். பண்டித ஜவஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதி தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும். இந்தி சில மாநிலங்களில் பேசப்படும் மொழியை தவிர நாடுமுழுதும் பேசப்படும் மொழி இல்லை. அவரவர் மாநிலத்திற்குரிய மொழி தேசியமொழி தான்.

இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்கிறார்கள் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசும் மக்கள் அல்ல, சில பேருக்கு இந்தி தெரிந்திருக்கலாம், அனைவரும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களில் அவரவர் மொழியில் தான் பேசுகிறார்கள் தவிர, இந்தி பேசும் மக்கள் அதிகமாக இருப்பது என்பது தவறு.

உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழிலே விவாதிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் காலத்தில், இந்திதான் ஒரே மொழி என  ஒரே நாடு, ஒரே மதம், ஆர்எஸ்எஸின் கொள்கைகளை பாஜக அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக்குரியது. பாஜக அரசு சொல்லுவதை செய்ய முயற்சிக்கிறார்கள், எல்லாத்தையும் செய்திட முடியாது. நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல விஷயங்களை திணிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இந்த அரசு பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தினால் சில விஷயங்களில் தற்காலிகமாக வெற்றி பெறலாம், இது நிரந்தர வெற்றி அல்ல என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பேனர்களை மட்டும் தலைவரின் படத்தை வைத்து மக்களின் இதயத்தில் தலைவர்கள் வாழமுடியாது. பேனர்கள் போஸ்டர்களிலும் வாழலாம் இதயத்தில் வாழ வேண்டுமென்றால் மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் சொந்த பணத்தில் பேனர்கள் கட்டினாலும் ஏஜெண்டுகள் மூலம் தான் கட்டி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பேனர்களை தடுப்பது போன்று அனைத்து நேரத்திலும் பேனர்களை தடை செய்ய வேண்டும் என கூறினார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP