ஹெல்மெட் விவகாரம்: போலீசார் அதிரடி!

உயர் நீதிமன்ற கண்டனத்தை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

ஹெல்மெட்  விவகாரம்:  போலீசார் அதிரடி!

உயர் நீதிமன்ற கண்டனத்தை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக ஹெல்மட் அணியாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? எனவும், வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யகூடாது?  எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது தீவிரமாக  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். காலை 8 மணியில் இருந்து ஹெல்மட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதி நவீன இ-சலான் மிஷின்கள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் விரைவாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP