கோவையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் சுமார் 3 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
 | 

கோவையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் சுமார் 3 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30 ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்திருந்தது. ’

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கோவையில் டவுன்ஹால், வடவள்ளி, காந்திபுரம், சிங்காநல்லூர், துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை கனமழை பெய்தது.

சுமார் மூன்று மணி நேரமாக தொடர்ந்த இந்த கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் ஓடியது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP