குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலில் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதன வழிபாடு!

தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்னவேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் -நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதனவழிபாடு செய்தனர்
 | 

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலில் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதன வழிபாடு!

தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் -நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதனவழிபாடு செய்தனர்.

தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீல மஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 9தினங்கள் கொண்டாடப்படும். அதன்படி கடந்த 30ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதிஉலாவந்தார்.

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலில் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதன வழிபாடு!

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். 

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலில் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதன வழிபாடு!

வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்த பாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP