காதலித்து, உறவு வைத்து ஏமாற்றிய காவலர்! போராடும் இளம்பெண்!

காதலித்து ஏமாற்றிய காவலர் மீது இளம்பெண் புகார்.. கணவன் மனைவி போல் வாழ்ந்ததாக வேதனை
 | 

காதலித்து, உறவு வைத்து ஏமாற்றிய காவலர்! போராடும் இளம்பெண்!

சென்னையில் காதலிப்பதாகக் கூறி கணவன் மனைவி போல் வாழ்ந்த பின்னர், திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதாக ஆயுதப்படை காவலர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். 

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார். இவரது மகன் வீரமணி புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு வீரமணியுடன், பட்டத்தாரி பெண் ஒருவரும் காவலருக்கான தேர்வு எழுதி பயிற்சிகளில் கலந்துக் கொண்டார். அப்போதிருந்தே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வீரமணி ஆயுதப்படை பிரிவில் சேர்ந்து பணியாற்றி வர, இளம் பெண் காவலராக முடியாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையில் ஆயுதப்படை காவலர் வீரமணி, தான் காதலித்த பெண்ணை வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

காதலித்து, உறவு வைத்து ஏமாற்றிய காவலர்! போராடும் இளம்பெண்!

இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வீரமணியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வீடு சிறியதாக உள்ளது எனவும், தனது மகன் உதவி ஆய்வாளருக்கு படிப்பதாகவும் வீரமணியின் தந்தை கூறியதாக அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னை திருமணம் செய்வதாக கூறியதை நம்பி வீரமணியுடன் கணவன், மனைவியாக ஒன்றகா வாழ்ந்து விட்டதாகவும், மோசடி செய்த காவலர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரிக்க வேண்டிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், வீரமணி காவலர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நியாயம் வேண்டும் என கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP