சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு அரசு அதிகாரி ஆதரவு: ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு ஆதரவாக விசாரணை அதிகாரி செயல்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு அரசு அதிகாரி ஆதரவு: ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு ஆதரவாக விசாரணை அதிகாரி செயல்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நகராட்சி ஊழியர்கள்  திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்பகோணம் நகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு குமரி மன்னன் என்பவர் மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார். அவர் பணியில் இருக்கும்போது, ஊழியர்களை  தரக்குறைவாக நடத்தியது உள்ளிட்ட பல குற்றசாட்டுக்களை கூறி  கும்பகோணம் நகராட்சியைச் சேர்ந்த 51 ஊழியர்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரின் பேரில்  நகராட்சி நிர்வாக ஆணையர் குமரி மன்னனை 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் மாநில நகராட்சி நிர்வாகம்  குமரி மன்னனின் மீது உள்ள புகார் தொடர்பான உண்மை தன்மையை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க திருப்பூர் மண்டல நிர்வாக பொறியாளர் வெங்கடேசனை நியமித்துள்ளது. 

அதன்படி, நேற்று காலை குற்றம்சாட்டப்பட்ட குமரி மன்னனுடன் வந்த அதிகாரி 51 ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். காலை முதல் இரவு வரை ஊழியர்களும் காத்திருந்து விசாரணைக்க ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், விசாரணையின் போது ஊழியர்களை நீண்ட நேரம் நிற்க வைத்து விசாரணை மேற்கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியே ஊழியர்களை விசாரணை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த   நகராட்சி ஊழியர்கள் விசாரணை நடைபெற்ற படேல் மண்டபத்தின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் செய்தததுடன், விசாரணை அதிகாரியை எதிர்த்து கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP