திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள 809 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள 809 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ரியாஸ்கான் (வயது42) என்பவர் மறைத்து எடுத்துவந்த ரூ.17.10 லட்சம் மதிப்புள்ள 447 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த திருச்சியை சேர்ந்த ஜியாவுல் என்ற பயணி மறைத்து எடுத்து வந்த ரூ.13.80 லட்சம் மதிப்புள்ள 362 கிராம் தங்கம் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 809 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ30.90 லட்சம் ஆகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP