திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள 751 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள  751 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது ரபிக், முகமது யூனிஸ், அப்துல் ரஹீம்,ஹைதர் கான் ஆகிய 4 பேரும் கமிஷன் அடிப்படையில் குருவிகளாக செயல்பட்டு ரூபாய் 29 லட்சம் மதிப்புள்ள 751 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் நகைகள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP