பொன். மாணிக்கவேல் குழுவுக்கு ஏன் தனி அலுவலகம் ஒதுக்கப்படவில்லை? - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

பொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டித்து 50 நாட்களாகியும், அவருக்கு ஏன் தனி அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நீதிமன்றம் நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
 | 

பொன். மாணிக்கவேல் குழுவுக்கு ஏன் தனி அலுவலகம் ஒதுக்கப்படவில்லை? - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

பொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டித்து 50 நாட்களாகியும், அவருக்கு ஏன் தனி அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசுக்கும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கும் தொடர் மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, அவரது பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

பின்னர் பொன் மாணிக்கவேல் மீது, சில காவல் அதிகாரிகள் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் அளித்தனர். 

இந்நிலையில், தனக்கு பதவி நீட்டிப்பு அளித்து 50 நாட்களாகியும் தனக்கு அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என்று சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் பொன்.மாணிக்கவேல் முறையிட்டார். 

இதையடுத்து நீதிபதி, "ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக நீடிக்கும் நிலையில், பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நீட்டிக்க கூடாதா? பொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டித்து 50 நாட்களாகியும், அவருக்கு ஏன் தனி அலுவலகம் ஒதுக்கப்படவில்லை? சிலைகடத்தல் வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் சரியானதாக இல்லை. இப்படியே சென்றால் நீதிமன்றம் நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்கக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தனர் 

மேலும், பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP