சென்னையில் தொடரும் பெண்  கடத்தல்? ஒரே நாளில் மூன்று புகார்கள்!

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் உட்பட 7 பெண்கள் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் தொடரும் பெண்  கடத்தல்? ஒரே நாளில் மூன்று புகார்கள்!

சென்னை தேனாம்பேட்டை  காவல் நிலையத்தில் தொடர்ந்து பெண்குழந்தைகள் உட்பட 7 பெண்கள் மாயமாகியுள்ளதாக புகார் குவிந்துள்ளதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் வேலூரை சேர்ந்த சரஸ்வதி(19) மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த கீதாஞ்சலி (19) ஆகிய இருவரும் பயின்று வந்துள்ளனர். இவர்கள் செங்கல்பட்டில் உள்ள சரஸ்வதியின் சகோதரி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளனர்.

 இந்நிலையில் நேற்று மாலை பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு பல மணி நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு  திரும்பதாதல் அச்சமடைந்த  சரஸ்வதியின் சகோதரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சகோதரி மற்றும் அவரது தோழியை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் தேனாம்பேட்டை எம்.ஏ கார்டன் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் சுல்தான் என்பவரது மனைவி சித்ரா தேவி மற்றும் அவரது இரு மகள்களை கடந்த 25 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளனர். அதனையடுத்து  தேனாம்பேட்டை வரதராஜபுரம் தெருவை சேர்ந்த ரவிக்குமாரின் மனைவி அனுஷா (21) மற்றும் அவரது குழந்தையும் மாயமாகியுள்ளனர். இவர்கள் மயமானது குறித்த புகாரும் தேனம்பேட்டை   காவல் நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண்கள் மாயமாகி வருவதால் இது கடத்தலாக இருக்கலாம் என  தேனாம்பேட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  ஒரே நாளில் மூன்று புகார் குவிந்துள்ளதால் சந்தேகமடைந்துள்ள தேனம்பேட்டை போலிசார், இது குறித்து  தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP