சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!

சென்னையில் செல்போன்களை திருடி விற்பனைசெய்பவர்கள், அதை வாங்கி விற்பனை செய்பவர்கள் என ஒட்டு மொத்த கும்பலையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்
 | 

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!

சென்னையில் செல்போன்களை திருடி விற்பனைசெய்பவர்கள், அதை வாங்கி விற்பனை செய்பவர்கள் என ஒட்டு மொத்த கும்பலையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர் 

சென்னை பாண்டிபஜார், தியாகராய நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்போன் பறிப்பு நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு செல்போன் பறிப்பு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

தொழில்நுட்ப அடிப்படையிலும் செல்போன்கள் எங்கே போனது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரையும், சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். செங்குட்டுவன் மீது கேரளாவில் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!

இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்,  திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் ஹரி கிருஷ்ணன் என்ற தரகர் மூலம் தியாகராயநகர், சத்யா பஜாரில் செல்போன்கள் விற்பனை செய்து வந்தது;ம், குறிப்பாக செல்போன் கடை வைத்திருக்கும் ராஜாமுகமது என்பவர் திருட்டு செல்போன்களை மட்டும் வாங்கி விற்றதும்  தெரியவந்தது. இதையடுத்து ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜாமுகமது ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 18 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP