விநாயகர் சிலை வைத்ததில் தகராறு: இளைஞர் குத்தி கொலை

திருச்சியில் விநாயகர் சிலைக்கு பணம் வசூல் செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

விநாயகர் சிலை வைத்ததில் தகராறு: இளைஞர் குத்தி கொலை

திருச்சியில் விநாயகர் சிலைக்கு பணம் வசூல் செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மகன் பார்த்தசாரதி (20). ரஜினி ரசிகரான இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அந்த பகுதியில் விநாயகர் சிலை வைத்தனர்.

 நேற்று மாலை பார்த்தசாரதி அப்பகுதியை சேர்ந்த சிலருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, ஐஸ்வர்யா நகரை சேர்ந்த தினேஷ்குமார் (22) விநாயகர் சிலை அமைப்பதற்காக பணம் வசூல் செய்ததில் பணத்தை ஏமாற்றி விட்டதாக பார்த்த சாரதி கூறியுள்ளார். ஏற்கனவே இருவருக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பதில் பிரச்னை ஏற்பட்டு முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பணம் மோசடி புகாரையும் கூறியதால் பார்த்தசாரதி மீது தினேஷ்குமார் ஆத்திரமடைந்து தாக்க முயன்றார். அருகில் இருந்த இளைஞர்கள் இருவரையும் விலக்கி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தினேஷ்குமாரின் ஆத்திரம் தணியாததால் நள்ளிரவு 1 மணியளவில் பார்த்த சாரதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் கழுத்தில் குத்தினார். இதை அவருடன் சென்ற நண்பர் கார்த்திகேயன் தடுக்க முயன்றார். 

விநாயகர் சிலை வைத்ததில் தகராறு: இளைஞர் குத்தி கொலை

அவரது இடது கையிலும் கத்திக்குத்து விழுந்தது. கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். கழுத்தில் கத்திகுத்து விழுந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி பார்த்தசாரதி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP