மாணவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்...!

சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சார் நலனுக்காகவும், மாணவர்கள் மெட்ரோ ரயில் பற்றி தெரிந்து கொள்ளவும், மெட்ரோ நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.
 | 

மாணவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்...!

சென்னையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில், அரசு பள்ளி மாணவர்கள் இன்று ஒருநாள் இலவச பயணமாக மெட்ரோ ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர். 

சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சார் நலனுக்காக,மெட்ரோ நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் மற்றும் டி.எம்.எஸ் வரை இலவசமாக அழைத்து செல்கின்றனர். இந்த பயணத்தின் போது மெட்ரோ ரயிலின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு முழுமையாக விளக்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் மாதத்திற்கான இலவச பயணத்தில் அரசு பள்ளி மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 28 பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டனர். இந்த பயணம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், மெட்ரோ நிர்வாகத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்ட இந்த இலவச பயணத்தில் இதுவரை 21 ஆயிரத்து 449 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP