யூடியூப் சேனல்கள் பெயரில் மோசடி! போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

'யூடியூப் சேனல்களை பார்த்தால் வருமானம்' - மோசடி இளைஞர்கள் கைது..
 | 

யூடியூப் சேனல்கள் பெயரில் மோசடி! போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

யூடியூப் சேனலில் முதலீடு செய்து, ஸ்மார்ட்போனில் அந்த சேனலை பார்த்தாலே பல மடங்கு ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம் என கூறி விளம்பரம் செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். 


வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் ஈரோட்டில் நூதுன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, ஸ்மார்ட் போன்களில் சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை பார்த்தால் வருமானம் பார்க்கலாம் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் உலா வந்தன. 

யூடியூப் சேனல்கள் பெயரில் மோசடி! போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

இதில் பணம் கட்டி சேர்ந்தால், மாதம் ரூ.272  முதல் ரூ.8,704 வரை, 20 மாதங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,74,080  வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த விளம்பரங்களை வெளியிட்ட பொறியியல் பட்டதாரிகளான பிரவீன்குமார் மற்றும் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அவர்கள் வேறென்ன மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP