கோவையில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது 

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்து, தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.இதேபோல, கடந்த திங்கட்கிழமை கற்பகம் கல்லூரி அருகே கள்ளப் பருந்தை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
 | 

கோவையில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது 

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனப்பகுதிக்குட்பட்ட முல்லன்காடு பகுதியில் உள்ள நிலத்தில் சிலர் காட்டுப் பன்றியை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பழனிசாமி (38), கருப்பையா (39), ரங்கசாமி (40), ரங்கராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி தலா ரூ. 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, கடந்த திங்கட்கிழமை கற்பகம் கல்லூரி அருகே கள்ளப் பருந்தை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். விற்கப்பட்ட பருந்தை மன்னார்காடு பகுதியில் வனத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடத்தை சேர்ந்த ஏ. பஷல் அகமது (22), பி. சஞ்சய் (22) ஆகியோருக்கு ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP